விஜய் டிவியின் பாக்கியலட்சுமி சீரியலில் பல்வேறு பரபரப்பான சம்பவங்கள் நடைபெற்று வருகிறது. இனியா தனது நண்பர்கள் உடன் கிளப் சென்று போலீசிடம் சிக்கிக்கொண்டது பெரிய பிரச்சனையை குடும்பத்தில் கொண்டு வந்து இருக்கிறது.
இனியாவை தன்னுடன் அழைத்து செல்ல கோபி கேட்கிறார். ஆனால் அவரை அசிங்கப்படுத்தி அனுப்புகிறார்கள்.
விவாகரத்தா?
இந்நிலையில் தற்போது அடுத்த வார ப்ரோமோ தற்போது வெளியாகி இருக்கிறது. அதில் கோபி ராதிகா உடன் சண்டை போடுவது காட்டப்பட்டு இருக்கிறது.
“உன்னை திருமணம் செய்தபிறகு தான் என் குடும்பம் என்னை விட்டு போய்ட்டாங்க” என கோபி கூற, ‘அப்போ என்னை டைவர்ஸ் பண்ணிட்டு அவங்க கூட போய்டுங்க’ என ராதிகா முகத்தில் அடித்தார் போல கூறிவிடுகிறார்.
அதன் பிறகு தனது குடும்பத்தை நினைத்து சோகமாக பாட்டு பாடி புலம்பி இருக்கிறார். ப்ரோமோவில் நீங்களே பாருங்க.