Thursday, April 24, 2025
Homeசினிமாராபின்ஹூட் திரை விமர்சனம்

ராபின்ஹூட் திரை விமர்சனம்


நிதின், ஸ்ரீலீலா நடிப்பில் வெளியாகியுள்ள ராபின்ஹூட் தெலுங்கு திரைப்படத்தின் விமர்சனத்தை இங்கே பார்ப்போம் வாங்க.

கதைக்களம்

ஆதரவற்றோர் இல்லத்தில் வளரும் நிதின், போதைய நிதி ஆசிரமத்திற்கு கிடைக்காததால் சிறுவயதில் இருந்தே திருட ஆரம்பிக்கிறார்.


வளர்ந்த பின் பிற ஆதரவற்றோர் இல்லங்களுக்கு பணம் கிடைக்க ராபின்ஹூட் ஆக கொள்ளையடிக்கிறார்.

மறுபுறம் மலைக்கிராமம் ஒன்றை தனது கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் கும்பல் ஒன்று, பல ஆண்டுகளாக கஞ்சா பயிர் செய்து அங்குள்ள மக்களை அடிமைகளாக வேலை வாங்குகிறது.


இந்த நிலையில், கஞ்சா கும்பல் ஆஸ்திரேலியாவில் உள்ள ஸ்ரீலீலாவை டிராப் செய்து மலைக்கிராமத்திற்கு வரவழைக்கிறது.


அவருடன் கொள்ளையடிப்பதை திடீரென நிறுத்திய நிதினும் செக்யூரிட்டியாக அங்கு வருகிறார். அதன் பின்னர் கஞ்சா கும்பலிடம் இருந்து நிதின் எப்படி மக்களைக் காப்பாற்றினார்? அவர் ஏன் அதனை செய்ய வேண்டும் என்பதற்கு விடைதான் மீதிக்கதை.

படம் பற்றிய அலசல்

நிதின் எப்போதும் போல் தனது வழக்கமான நடிப்பை தந்திருக்கிறார். ராஜேந்திர பிரசாத்துடன் சேர்ந்து அவர் அடிக்கும் லூட்டிகள் தியேட்டரை வயிறு குலுங்க சிரிக்க வைக்கிறது.


இவர்களுடன் வெண்ணிலா கிஷோரும் இணைந்துகொள்ள காமெடி சரவெடியாக மாறுகிறது படம். வில்லனாக வரும் தேவ்டட்டா நாக் தோற்றத்திலேயே நம்மை மிரட்டுகிறார்.


ஆனால் ஷைன் டாம் சாக்கோவை காமெடியாக்கிவிட்டார்கள். ராபின்ஹுட்டை பிடிக்க லீவ் வேண்டும் என்பதற்காக தன் கையை அவர் சுட்டுக்கொள்கிறார். அதைப் பார்க்கும்போது “என்னய்யா இப்படிலாம் பண்ற?” என்றுதான் கேட்க தோன்றுகிறது.

படத்தை முழுக்க முழுக்க எண்டர்டைன்மென்ட் ஆக கொடுக்க வேண்டும் என்பதற்காக மெனக்கெட்டிருக்கிறார் இயக்குநர். அதற்கு ஏற்றாற்போல் திரைக்கதையை அமைத்திருக்கிறார்.

ராபின்ஹூட் திரை விமர்சனம் | Robinhood Movie Review


காமெடி, ஆக்ஷன், பாடல்கள் என அனைத்தும் சரியாக பிளேஸ் ஆகிருப்பத்தில் ஜெயிக்கிறது படம். ஸ்ரீலீலாவும் காமெடியில் ஆங்காங்கே சிரிக்க வைக்கிறார்.

கிளைமேக்ஸில் வரும் ட்விஸ்ட் சிறப்பு. எல்லாரும் எதிர்பார்த்த டேவிட் வார்னரின் என்ட்ரி செம. அவர் பேசும் பஞ்ச் செம காமெடி.


ஜி.வி.பிரகாஷின் இசையில் பாடல்கள் அனைத்தும் ரசிக்கும் ரகம். சாய் ஸ்ரீராமின் ஒளிப்பதிவு கண்களுக்கு விருந்து.

க்ளாப்ஸ்

காமெடி காட்சிகள்


பாடல்கள்

கிளைமேக்ஸ் ட்விஸ்ட்


மைனஸ்

வில்லன் படத்தை நினைவுப்படுத்தும் முதல் பாதி.


மொத்தத்தில் பக்காவான காமெடி என்டர்டைனராக ஆடியன்ஸை மகிழ்வித்துள்ளார் இந்த ராபின்ஹூட். குடும்பத்துடன் கண்டிப்பாக இப்படத்தை ரசிக்கலாம்.


ரேட்டிங்: 3/5 

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments