ராயன்
நாளை திரையரங்கில் பிரமாண்டமாக வெளிவரவிருக்கும் திரைப்படம் ராயன். தனுஷ் இப்படத்தை இயக்கி ஹீரோவாகவும் நடித்துள்ளார். சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது.
ஏ.ஆர். ரஹ்மான் இப்படத்திற்கு இசையமைக்க சந்தீப் கிஷன், துஷாரா விஜயன், காளிதாஸ் ஜெயராம், அபர்ணா பாலமுரளி, எஸ்.ஜே. சூர்யா, செல்வராகவன் உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.
சமீபத்தில் தான் இப்படத்தின் இசை வெளியிட்டு விழா நடந்து முடிந்தது. இதில் தனுஷின் ஸ்பீச் படுவைரலானது. குறிப்பாக அவர் தனது போயஸ் கார்டன் வீடு குறித்து பேசியது மக்கள் மத்தியில் வைரலாகிவிட்டது.
வசூல்
இந்த நிலையில், ராயன் படத்திற்கான ப்ரீ புக்கிங் வசூல் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, ராயன் திரைப்படம் இதுவரை ப்ரீ புக்கிங்கில் ரூ. 5 கோடிக்கும் மேல் வசூல் செய்துள்ளதாம்.
இதனால் இப்படத்தின் முதல் நாள் வசூல் மாபெரும் சாதனை படைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதுவரை வந்த தனுஷ் படங்களின் வசூலை விட ராயன் அதிகமாக வசூல் செய்யும் என்றும் பேச்சு எழுந்துள்ளது. பொறுத்திருந்து பார்ப்போம் என்ன நடக்கப்போகிறது என்று.