தனுஷ்
நடிகர் தனுஷ், பவர் பாண்டி படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானார். தற்போது, தனது 50வது படமான ‘ராயன்’ படத்தை இயக்கி நடித்துள்ளார்.
இப்படத்தில் எஸ். ஜே. சூர்யா, காளிதாஸ் ஜெயராம், நித்யா மேனன், துஷாரா விஜயன், சந்தீப் கிஷன், அபர்ணா முரளி போன்ற பிரபலங்கள் நடித்துள்ளனர்.
இப்படத்திற்கு ஏ. ஆர். ரஹ்மான் இசையமைத்துள்ளார்.
கேங்ஸ்டர் கதை அம்சத்தில் உருவாகியுள்ள ‘ராயன்’ திரைப்படம் வரவிருக்கும் ஜூலை 26-ஆம் தேதி வெளியாக உள்ளது. தற்போது, இப்படத்தின் ப்ரோமோஷன் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.
இத்தனை கோடியா?
இந்நிலையில் ராயன் படத்தின் செட் க்கு மட்டும் 30 கோடி செலவு செய்துள்ளதாக நடிகர் எஸ் ஜே சூர்யா ஒரு பேட்டியில் தெரிவித்துள்ளார்.