நடிகர் தனுஷ் இயக்கி நடித்த ராயன் படம் கடந்த மாதம் ரிலீஸ் ஆகி மிகப்பெரிய ஹிட் ஆனது.
தனுஷின் 50வது படமான ராயனை ரசிகர்கள் கொண்டாடினார்கள். மேலும் நாளை (ஆகஸ்ட் 23, 2024) ராயன் படம் ஒடிடியில் வெளியாக இருப்பதால் ரசிகர்கள் அதை மேலும் கொண்டாடுவார்கள் என எதிர்பார்க்கலாம்.
செக் கொடுத்த கலாநிதி மாறன்
இந்நிலையில் ராயன் படம் ஹிட் ஆனதற்கு பரிசாக தனுஷை அழைத்து சன் பிக்சர்ஸ் சர்ப்ரைஸ் கொடுத்து இருக்கிறது.
தனுஷ் நடித்ததற்கு ஒரு செக், இயக்கியதற்கு ஒரு செக் என இரண்டு செக்களை பரிசாக கொடுத்து இருக்கிறார் கலாநிதி மாறன்.
சன் பிக்சர்ஸ் முந்தைய படமான ஜெயிலர் ஹிட் ஆன போது ரஜினிக்கு சொகுசு கார் மற்றும் செக் கொடுத்தார் கலாநிதி மாறன் என்பது குறிப்பிடத்தக்கது.