Friday, April 18, 2025
Homeசினிமாராஷ்மிகாவின் மகளுடனும் நடிப்பேன்.. 59 வயது நடிகர் சல்மான் கான் பேச்சு

ராஷ்மிகாவின் மகளுடனும் நடிப்பேன்.. 59 வயது நடிகர் சல்மான் கான் பேச்சு


சிக்கந்தர் 

பாலிவுட் சினிமாவில் சூப்பர்ஸ்டார் நடிகர்களில் ஒருவரான சல்மான் கான் தற்போது சிக்கந்தர் திரைப்படத்தில் நடித்துள்ளார். ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் உருவாகியுள்ள இப்படத்தில் சல்மான் கானுடன் இணைந்து ராஷ்மிகா மந்தனா ஜோடியாக நடித்துள்ளார்.

மேலும் காஜல் அகர்வால், சத்யராஜ், கிஷோர் உள்ளிட்ட பலரும் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கிறார்கள்.

இதில், 59 வயதாகும் சல்மான் கான் 28 வயதாகும் ராஷ்மிகா மந்தனாவிற்கு ஜோடியாக நடிக்கிறார், இருவருக்கும் இடையே 31 வயது வித்தியாசம் இருக்கிறது என விமர்சனங்கள் எழுந்தது. மகள் வயது உள்ள ராஷ்மிகாவிற்கு ஜோடியாக நடிக்கிறாரே என்றெல்லாம் விமர்சனங்கள் வந்தன.

சல்மான் கான் பேச்சு

இந்த நிலையில், நேற்று நடைபெற்று இப்படத்தின் டிரைலர் வெளியிட்டு விழாவில் இதுகுறித்து வெளிப்படையாக சல்மான் கான் பேசினார்.

“ஹீரோயினுக்கும் எனக்கும் இடையே 31 வயது வித்தியாசம் உள்ளது என பேசுகிறார்கள். வயது வித்தியாசத்தால் ஹீரோயினுக்கு பிரச்சனை இல்லை. அவரின் அப்பாவுக்கும் அதில் பிரச்சனை இல்லை. அப்படி இருக்கும்போது உங்களுக்கு என்ன பிரச்சனை?. ராஷ்மிகாவுக்கு திருமணமாகி மகள் பிறந்தால், அவருடனும் சேர்ந்து நடிப்பேன்” என கூறியுள்ளார்.

ராஷ்மிகாவின் மகளுடனும் நடிப்பேன்.. 59 வயது நடிகர் சல்மான் கான் பேச்சு | Salman Khan Say He Will Act With Rashmika Daughter

வயது வித்தியாசம் குறித்து எழுந்த விமர்சனங்களுக்கு சல்மான் கான் கொடுத்த பதிலடி தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments