இயக்குனர் முருகதாஸ் தற்போது ஹிந்தியில் சிக்கந்தர் என்ற படத்தை இயக்கி இருக்கிறார். அதில் சல்மான் கான் ஹீரோவாகவும், ராஷ்மிகா ஹீரோயினாகவும் நடித்து இருக்கின்றனர்.
வரும் மார்ச் 30ம் தேதி சிக்கந்தர் ரிலீஸ் ஆகும் நிலையில் முன்பதிவு தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
ராஷ்மிகா பேயா?
இந்த படத்தில் ராஷ்மிகா பேயாக நடித்து இருக்கிறார் என ஒரு தகவல் பரவி வருகிறது. படத்தின் ட்ரெய்லரில் அப்படி காட்டப்படவில்லை என்றாலும் பாடல்கள் மற்றும் சில காட்சிகளின் அடிப்படையில் இப்படி சொல்லப்படுகிறது.
ராஷ்மிகா இறந்துவிட்ட நிலையில் அவர் உடன் இருப்பது போலவே சல்மான் கான் உணர்வது போல தான் கதை இருக்கும் என்றும் சொல்லப்படுகிறது.