நடிகர் ராகவா லாரன்ஸ்
தமிழ் சினிமாவில் நடிப்பு, நடனம், படம் இயக்குவது போன்ற பல துறைகளில் ஜொலித்து கொண்டு இருப்பவர் ராகவா லாரன்ஸ்.
இவர் பல சிறந்த படங்களை இயக்கியும் நடித்தும் உள்ளார். ராகவா லாரன்ஸ் நடிக்கும் அவரது 25 – வது படம் குறித்த அறிவிப்பு சமீபத்தில் வெளியானது.
ராகவா லாரன்ஸின் 25-வது பட அப்டேட்
அதன்படி, நடிகர் ராகவா லாரன்ஸின் 25வது படத்தை கோனேரு சத்யநாராயணா தயாரிப்பில் தெலுங்கு இயக்குனர் ரமேஷ் வர்மா இயக்கவுள்ளார் என படக்குழு அறிவித்திருந்தனர்.
இந்த நிலையில்,
இந்தியில் வெளியாகி மாபெரும் வெற்றி பெற்ற படமான கில் தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் ரீமேக் செய்யப்பட உள்ளதாகவும், பிரம்மாண்ட பட்ஜெட்டில் உருவாக இருக்கும் இந்த படத்தில் கதாநாயகனாக ராகவா லாரன்ஸ் நடிக்க உள்ளார் என்றும் இந்த படத்தின் படப்பிடிப்பு நவம்பர் முதல் தொடங்கும் என கூறப்படுகிறது.
இந்தியில் வெளியான இந்த படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றதால் ரீமேக்கிலும் நல்ல வரவேற்பு பெரும் என எதிர்பாக்கப்படுகிறது.