தேவாரா படம்
தெலுங்கு சினிமாவில் உள்ள டாப் நடிகர்களில் ஒருவராக இருப்பவர் ஜுனியர் என்டிஆர்.
கொரடலா சிவா இயக்கத்தில் ஜுனியர் என்டிஆர் நடிப்பில் ரூ. 300 கோடி பட்ஜெட்டில் தயாராகி வெளிவந்த படம் தான் தேவாரா.
இப்படத்தின் மூலம் தென்னிந்திய சினிமாவில் என்ட்ரி கொடுத்துள்ளவர் மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் மகள் ஜான்வி கபூர்.
காந்தி ஜெயந்தி விடுமுறையை முன்னிட்டு இன்று படத்தின் வசூல் டபுள் மடங்கு உயரும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.
மொத்த வசூல்
3 நாட்கள் முடிவில் ரூ. 304 கோடி படம் வசூலித்துள்ளதாக கூறப்படும் நிலையில் 5 நாள் முடிவில் எவ்வளவு வசூல் என்ற விவரம் வெளியாகியுள்ளது.
5 நாள் முடிவில் ஜுனியர் என்டிஆர், ஜான்வி கபூர் முதன்முறையாக ஜோடி சேர்ந்து நடித்துள்ள இப்படம் ரூ. 330 கோடியை எட்டிவிட்டதாக கூறப்படுகிறது.