கல்கி 2898 ஏடி
பான் இந்திய படமாக உருவாகி ரசிகர்களிடம் அமோக வரவேற்பு பெற்றுவரும் படம் கல்கி 2898AD.
கீர்த்தி சுரேஷின் நடிப்பில் வெளியான நடிகையர் திலகம் படத்தை இயக்கிய நாக் அஸ்வின் இயக்கத்தில் தயாரான பிரம்மாண்ட படம் கல்கி 2898ஏடி. பல மொழிகளில் வெளியாகி கல்கி சக்கை போடு போட்டு வருகிறது.
அறிவியல்-புராண கதை கலந்து திரைக்கதையில் கடந்த ஜுன் 27ம் தேதி இப்படம் ரிலீசாகி இருந்தது. குறிப்பாக படத்தில் அட்டகாசமான கிராஃபிக்ஸ் காட்சிகள் ரசிகர்கள் பலரையும் கவர்ந்தது.
பாக்ஸ் ஆபிஸ்
இப்படம் கலவையான விமர்சனங்களை பெற்றாலும் பிரம்மாண்ட மேக்கிங் காரணமாக அனைவரும் திரையரங்குகள் சென்று படத்தை பார்க்கிறார்கள்.
ரூ. 600 கோடி பட்ஜெட்டில் தயாரான இப்படம் 5 நாள் முடிவில் ரூ. 575 கோடி வரை வசூல் சாதனை செய்துள்ளது.