Wednesday, March 26, 2025
Homeசினிமாரோபோ ஷங்கர் மகள் நடிகை இந்திராஜாவிற்கு குழந்தை பிறந்தாச்சு.. மகிழ்ச்சியில் குடும்பம்

ரோபோ ஷங்கர் மகள் நடிகை இந்திராஜாவிற்கு குழந்தை பிறந்தாச்சு.. மகிழ்ச்சியில் குடும்பம்


ரோபோ ஷங்கர் மகள் இந்திராஜா

தமிழ் சினிமாவில் மிகவும் பிரபலமான நடிகர்களில் ஒருவர் ரோபோ ஷங்கர். விஜய் டிவியின் மூலம் மக்கள் மனதில் இடம்பிடித்து, இன்று வெள்ளித்திரையில் முக்கிய நட்சத்திரமாக மாறியுள்ளார்.

இவருடைய மகள் இந்திரஜா ஷங்கர், தளபதி விஜய்யின் பிகில் படத்தின் மூலம் சினிமாவில் நடிகையாக அறிமுகமானார். ஆனால், அதன்பின் தொடர்ந்து நடிக்கவில்லை. கார்த்திக் என்பவரை திருமணம் செய்துகொண்டார்.

திருமணத்திற்கு பின் இந்திரஜா மற்றும் அவருடைய கணவர் கார்த்திக் இருவரும் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான Mr And Mrs சின்னத்திரை நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.

ரோபோ ஷங்கர் மகள் நடிகை இந்திராஜாவிற்கு குழந்தை பிறந்தாச்சு.. மகிழ்ச்சியில் குடும்பம் | Indraja Shankar Welcomes Baby Boy

அந்த நிகழ்ச்சியில் இவர்கள் சில வாரங்கள் போட்டியாளராக இருந்து வந்த நிலையில், இந்திரஜா கர்ப்பமாக இருப்பதாக அறிவித்தார். இதனால் அந்த நிகழ்ச்சியில் இருந்து இவர்கள் பாதியிலேயே விலகினார்கள்.

குழந்தை பிறந்தாச்சு

கர்ப்பமாக இருந்து வந்த இந்திராஜாவிற்கு தற்போது ஆண் குழந்தை பிறந்துள்ளது. குழந்தையும் அம்மாவும் நலமாக இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. ரோபோ ஷங்கர் தாத்தாவாகியுள்ளார். ரசிகர்கள் தங்களது வாழ்த்துக்களை சமூக வலைத்தளங்களில் தெரிவித்து வருகிறார்கள்.

ரோபோ ஷங்கர் மகள் நடிகை இந்திராஜாவிற்கு குழந்தை பிறந்தாச்சு.. மகிழ்ச்சியில் குடும்பம் | Indraja Shankar Welcomes Baby Boy

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments