ஹிப் ஹாப் ஆதி
தமிழ் சினிமாவில் இண்டிபெண்டெண்ட் ஆர்டிஸ்ட்டாக இருந்து இசையமைப்பாளராக மாறியவர் ஹிப் ஹாப் ஆதி. இவர் ஆம்பள படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமானார்.
இதன்பின் மீசையா முறுக்கு படத்தின் மூலம் ஹீரோவாகவும் என்ட்ரி கொடுத்தார். ஹீரோவாகவும், இசையமைப்பாளராகவும் கலக்கிக்கொண்டிருந்த ஹிப் ஹாப் ஆதி சில வருடங்கள் சினிமாவிலிருந்து ஒதுங்கி படிப்பில் கவனம் செலுத்தினார்.
பின் மீண்டும் சினிமாவில் என்ட்ரி கொடுத்த ஆதிக்கு இந்த ஆண்டு PT sir எனும் ஹிட் திரைப்படம் கிடைத்துள்ளது. மேலும் இசையமைப்பாளராக அரண்மனை 4 எனும் ப்ளாக் பஸ்டர் படத்தை கொடுத்துள்ளார்.
ரோஹித் ஷர்மா வா..?
இந்த நிலையில், தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் ஹிப் ஹாப் ஆதியை இந்திய கிரிக்கெட் வீரர் ரோஹித் ஷர்மா என நினைத்து ரசிகர் ஒருவர் புகைப்படம் எடுத்துக்கொண்டுள்ளார்.
தன்னை ரோஹித் சர்மா என நினைத்துக்கொண்டிருந்த ரசிகரிடம் நான் ரோஹித் ஷர்மா இல்லை, ஹிப் ஹாப் ஆதி இசையமைப்பாளர் என அவர் கூறிவிட்டு செல்வதை வீடியோவாக தனது இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ளார்.
இதோ அந்த வீடியோ..