சிறகடிக்க ஆசை
சிறகடிக்க ஆசை சீரியலில் இப்போது மொட்ட கடுதாசி பிரச்சனை தான் ஓடிக் கொண்டிருக்கிறது.
இன்றைய எபிசோடில் மனோஜ், முத்து தான் இந்த கடிதத்தை அனுப்பினார் சண்டை போடுகிறார்.
விஷயம் அறிந்த முத்து, இப்படி கடிதம் எல்லாம் நான் போட மாட்டேன், உன் மீது கோபம் இருந்தால் நேரில் வந்து அடித்து உதைத்திருப்பேன் என மாஸாக கூறுகிறார்.
இடையில் Bodyguard காமெடி காட்சிகள் வேற இடம் பெறுகிறது. கடைசியில் ரோஹினி நடந்த விஷயங்கள் கூற யாரோ உங்களை மிரட்ட தான் இப்படி செய்துள்ளார்கள், அதை கண்டுபிடிங்கள் என முத்து-மீனா கூறுகிறார்கள்.
அடுத்த வாரம்
பின் அடுத்த வாரத்திற்கான புரொமோவில் உனக்கு இந்த கடிதத்தை அனுப்பி மிரட்டியது யார் என்பதை நான் கண்டுபிடித்துவிட்டேன் என முத்து கூறுகிறார்.
இதனை கேட்டு ரோஹினி கடும் ஷாக் ஆகிறார், அடுத்த வாரம் என்ன நடக்கிறது என்பதை பொறுத்திருந்து காண்போம்.