நடிகர் ஷாருக்கான்
பாலிவுட் திரையுலகில் கிங் கான் என ரசிகர்களால் கொண்டாடப்பட்டு வருபவர் நடிகர் ஷாருக்கான். இவர் நடிப்பில் கடந்த ஆண்டு வெளிவந்த பதான், ஜவான் மற்றும் டுங்கி ஆகிய மூன்று படங்களும் மாபெரும் அளவில் வெற்றியடைந்தது.
இதில் பதான் மற்றும் ஜவான் ஆகிய இரண்டு திரைப்படங்களும் பாக்ஸ் ஆபிஸில் ரூ. 1000 கோடிக்கும் மேல் வசூல் செய்து சாதனை படைத்தது. மேலும் டுங்கி திரைப்படம் ரூ. 400 கோடிக்கும் மேல் வசூல் செய்து இருந்தது குறிப்பிடத்தக்கது.
உலகளவில் பல லட்சம் ரசிகர்களை கொண்டுள்ள நடிகர் ஷாருக்கானின் சொத்து மதிப்பு ரூ. 6300 கோடிக்கும் மேல் வசூல் செய்துள்ளதாக தகவல் வெளியாகி இருந்தது. இதுகுறித்து நாம் முந்தைய செய்திகளில் பார்த்து இருக்கிறோம்.
பிரமாண்ட வீடு
இந்த நிலையில், லண்டனில் உள்ள ஷாருக்கானின் வீடு குறித்து வீடியோ ஒன்று வெளியாகியுள்ளது. லண்டனில் இருக்கும் ஷாருக்கானின் பிரமாண்ட வீடு இதுதான் என கூறி வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது. ஆனால், இது எந்த அளவிற்கு உண்மை என்று தெரியவில்லை.
இதோ அந்த வீடியோ..