சமீபத்தில் வெளிவந்து மாபெரும் அளவில் வெற்றியடைந்துள்ள திரைப்படம் லப்பர் பந்து. இப்படத்தின் மூலம் அட்டகத்தி தினேஷ் மாஸ் கம் பேக் கொடுத்துள்ளார்.
நடிகை சுவாசிகா
லப்பர் பந்து திரைப்படத்தில் அட்டகத்தி தினேஷின் மனைவியாக பிரபல நடிகை சுவாசிகா என்பவர் நடித்திருந்தார். இவருடைய கதாபாத்திரம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. ஆனால், இதுதான் இவருடைய முதல் படம் என பலரும் நினைத்துக்கொண்டனர்.
ஆனால், இவர் பல வருடங்களுக்கு முன்பே தமிழ் படத்தில் நடித்துள்ளார். வைகை, கோரிப்பாளையம், சாட்டை ஆகிய படங்களில் நடித்துள்ள நடிகை சுவாசிகாவிற்கு பேர் சொல்லும் அளவிற்கு தமிழ் படத்தில் வாய்ப்பு கிடைக்கவில்லை.
இதன்பின் மலையாள திரையுலகிற்கு சென்ற நடிகை சுவாசிகாவிற்கு தொடர்ந்து பல்வேறு பட வாய்ப்புகள் கிடைத்தது. இதனை தொடர்ந்து மீண்டும் தமிழ் சினிமாவில் லப்பர் பந்து படத்தின் மூலம் என்ட்ரி கொடுத்து இன்று ரசிகர்கள் மத்தியில் பிரபாலாகியுள்ளார்.
பிரேம் ஜேக்கப் – சுவாசிகா
நடிகை சுவாசிகா விஜய் டிவி சீரியல் நடிகர் பிரேம் ஜேக்கப் என்பவரின் மனைவி என்பது பலருக்கும் தெரிந்திருக்க வாய்ப்பு இல்லை. விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல் நீ நான் காதல்.
இந்த சீரியலில் கதாநாயகனாக நடித்து வருபவர் தான் நடிகர் பிரேம் ஜேக்கப். இவரும் நடிகை சுவாசிகாவும் காதலித்து திருமணம் செய்துகொண்டுள்ளனர். சுவாசிகா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தனது கணவர் பிரேம் உடன் எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை தொடர்ந்து பதிவு செய்து வருகிறார்.
இதோ நீங்களே பாருங்க..