சீரியல் நடிகை
அண்ணாமலை சீரியல் மூலம் சின்னத்திரையில் என்ட்ரி கொடுத்தவர் தான் நடிகை ஸ்வேதா பாரதி.
முதல் சீரியலே அவருக்கு நல்ல வரவேற்பு கொடுக்க அடுத்தடுத்து வம்சம், மலர்கள் உள்ளிட்ட பல சீரியலில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வந்தார்.
சீரியலில் நடித்துக்கொண்டிருந்த போதே கலைஞர் தொலைக்காட்சியில் வெளியான மானாட மயிலாட நடன நிகழ்ச்சியில் கலந்துகொண்டார்.
அதன்பின் ஜீ தமிழில் சூப்பர் மாம் நிகழ்ச்சியில் தனது மகனுடன் கலந்து கொண்டார். ரோஜா மற்றும் செம்பருத்தி சீரியல்களில் நெகட்டீவ் ரோலில் நடித்து ரசிகர்களை ஆச்சரியப்படுத்தினார்.
காதல் திருமணம்
இந்த நிலையில் தனது திருமண வாழ்க்கை குறித்து மனம் திறந்து பேசியுள்ளார் ஸ்வேதா. அதில் அவர், பெற்றோரின் எதிர்ப்பை மீறி தான் இயக்குனர் தமிழ் அவர்களை காதலித்து வந்தேன்.
பின் ஒரு கட்டத்தில் வீட்டைவிட்டு வெளியேறி அவருடன் லிவிங் ரிலேஷன்ஷிப்பில் இருந்துள்ளார், அப்போது அவருக்கு ஆண் குழந்தை பிறந்திருக்கிறது. குழந்தை பிறந்த பிறகே இரு வீட்டாரும் ஒப்புக்கொண்டு அதன்பின திருமணம் செய்து வைத்துள்ளனர்.
ஸ்வேதா மற்றும் தமிழ் திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் அவரது மகன் இடையில் அமர்ந்திருக்கிறார். வந்தவர்களிடம் தனது சகோதரியின் மகன் என்று கூறி மழுப்பியதாக நடிகை ஒரு பேட்டியில் கூறியுள்ளார்.