விக்னேஷ் சிவன்
சினிமாவில் சாதனை படைக்க பல கலைஞர்கள் உள்ளே வந்தாலும் சிலருக்கு க்ளிக் ஆகிறது, அடுத்தடுத்து உயருகிறார்கள்.
அப்படி சிம்புவை வைத்து போடா போடி என்ற படத்தை இயக்கி தமிழ் மக்களிடம் கவனத்தை பெற்றிருந்தார் விக்னேஷ் சிவன்.
அப்படத்திற்கு பிறகு விஜய் சேதுபதி, நயன்தாராவை வைத்து நானும் ரவுடித்தான் படத்தை இயக்க அப்படம் மெகா ஹிட்டானது.
பின் தானா சேர்ந்த கூட்டம், காத்துவாக்குல ரெண்டு காதல் உள்ளிட்ட படங்கள் சுமாரான வரவேற்பை பெற்றது. இப்போது பிரதீப் ரங்கநாதனை வைத்து லவ் இன்ஸுரன்ஸ் கம்பெனி என்ற படத்தை இயக்கி வருகிறார்.
சொத்து மதிப்பு
இன்று தனது 39வது பிறந்தநாளை விக்னேஷ் சிவன் கொண்டாடி வருகிறார். அவருக்கு ஸ்பெஷல் பிறந்தநாள் வாழ்த்தை நயன்தாரா சில அழகிய புகைப்படங்களுடன் கூறியிருந்தார்.
ஒரு பாடல் எழுத ரூ. 3 லட்சமும், ஒரு படம் இயக்க ரூ. 4 கோடியும் சம்பளம் பெறுகிறாராம். மேலும் சொந்தமாக சில தொழில்களை செய்துவரும் விக்னேஷ் சிவன் ரூ. 55 முதல் ரூ. 60 கோடி வரை சொத்து சேர்த்து வைத்திருப்பதாக கூறப்படுகிறது.