Wednesday, September 11, 2024
Homeசினிமாலேடி சூப்பர் ஸ்டார் பட்டம் என்பது எனக்கு அவமானம்... ஓபனாக கூறிய பிரபல நடிகை

லேடி சூப்பர் ஸ்டார் பட்டம் என்பது எனக்கு அவமானம்… ஓபனாக கூறிய பிரபல நடிகை


நயன்தாரா

எந்த சினிமாவை எடுத்துக்கொண்டாலும் நடிகர்களுக்கு ஒரு பட்டப்பெயர் வைத்து அழைப்பது ரசிகர்களின் வழக்கம்.

அப்படி சூப்பர் ஸ்டார் தொடங்கி புரட்சி தளபதி வரை நிறைய பிரபலங்களுக்கு பட்டம் உள்ளது. நாயகிகளில் பெரிய அளவில் பட்டப் பெயரால் கொண்டாடப்படுபவர் நடிகை நயன்தாரா தான்.

ரசிகர்களால் லேடி சூப்பர் ஸ்டார் என்று அழைக்கப்படும் இவர் அந்த பெயருக்கு ஏற்றவாரு சோலோவாக படங்கள் நடித்து அதில் பாக்ஸ் ஆபிஸ் கலெக்ஷனையும் பெற்று கெத்து காட்டியுள்ளார்.

தற்போது லேடி சூப்பர் ஸ்டார் பட்டம் குறித்து ஒரு நடிகை பேசியுள்ளார்.


யார் அவர்


பிரபல மலையாள நடிகை மஞ்சு வாரியர் தமிழில் அசுரன் படத்தில் நடித்தவர் விடுதலை 2, வேட்டையன் உள்ளிட்ட படங்களில் நடித்து வருகிறார்.

சமீபத்தில் சமூக வலைதளங்களில் ரசிகர்களின் கேள்விக்கு பதிலளித்தவரிடம் லேடி சூப்பர் ஸ்டார் குறித்த கேள்வி எழுப்பியுள்ளது.

இதற்கு மஞ்சு வாரியர், என்னை ஒரு சிலர் லேடி சூப்பர் ஸ்டார் என்று அழைப்பது தேவையில்லாத விவாதங்களை சமூக வலைதளங்களில் ஏற்படுத்தி வருகிறது. இது எனக்கு தனிப்பட்ட முறையில் அவமானமாக உள்ளது.

இந்த பட்டத்திற்கு என சில வரைமுறைகளை வைத்திருக்கும் நிலையில் உண்மையில் எனக்கு எந்த பட்டமும் வேண்டாம், ரசிகர்களின் அன்பு ஒன்றே போதும் என்று தெரிவித்துள்ளார். 

லேடி சூப்பர் ஸ்டார் பட்டம் என்பது எனக்கு அவமானம்... ஓபனாக கூறிய பிரபல நடிகை | Top Actress About Lady Super Star Title

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments