மகாராஜா படம்
குரங்கு பொம்மை படத்தை இயக்கி வெற்றிக்கண்ட நித்திலன் சுவாமிநாதனின் இரண்டாவது படமாக உருவாகியது விஜய் சேதுபதி நடித்த மகாராஜா.
கடந்த ஜுன் 14ம் தேதி வெளியான இப்படம் வித்தியாசமான ஒரு பழிவாங்கல் கதையாக உருவாகி இருந்தது.
இதில், விஜய் சேதுபதியை தாண்டி அனுராக் காஷ்யப், மம்தா மோகன்தாஸ், நட்ராஜ், முனிஸ்காந்த், சிங்கம்புலி, பாரதிராஜா, வினோத் சாகர் என பலர் நடித்துள்ளனர்.
பட வசூல்
2024ம் ஆண்டு வெளியான படங்களில் ரூ. 55 கோடியை விரைவில் எட்டிய படம் என்ற பெருமையை பெற்று வருகிறது.
தற்போது வரை படம் மொத்தமாக ரூ. 70 கோடிக்கு மேல் வசூல் செய்துள்ளதாக கூறப்படுகிறது.
வரும் நாட்களில் எந்த ஒரு பெரிய நடிகரின் பட ரிலீஸ் இல்லை என்பதால் மகாராஜா கண்டிப்பாக ரூ. 100 கோடி வரை எட்டும் என்கின்றனர்.