கல்கி 2898ஏடி
நாக் அஸ்வின் இயக்கத்தில் பிரபாஸ், அமிதாப் பச்சன், கமல்ஹாசன், தீபிகா படுகோனே, தீஷா பதானி என பலர் நடிக்க வெளியாகி இருந்த படம் கல்கி 2898 ஏடி.
ரூ. 600 கோடி பட்ஜெட்டில் உருவான இப்படம் மிகப்பெரிய எதிர்ப்பார்ப்போடு திரையரங்குகளில் வெளியானது.
ஆந்திரா மற்றும் தெலுங்கானாவில் இப்படத்திற்கு திரையரங்குகளில் கூட்டம் அலைமோதியது.
ஆனால் தமிழகத்தில் படத்துக்கு கலவையான விமர்சனங்களே கிடைத்தன. ஆனால் படத்தின் வசூலுக்கு எந்த குறையும் இல்லை என்றே கூறலாம்.
ஓடிடி ரிலீஸ்
நல்ல வரவேற்பை பெற்ற கல்கி 2898 ஏடி படம் எப்போது ஓடிடியில் வெளியாகும் என்ற கேள்வி கடந்த சில நாட்களாகவே உள்ளது.
அதாவது வரும் ஆகஸ்ட் 29ம் தேதி அமேசான் ப்ரைம் ஓடிடி தளத்தில் வெளியாக இருப்பதாக அறிவிக்கப்பட்டிருக்கிறது.