மகாராஜா
மக்கள் செல்வன் விஜய் சேதுபதியின் நடிப்பில் சமீபத்தில் வெளிவந்த திரைப்படம் மகாராஜா. இப்படத்தை நித்திலன் இயக்கியிருந்தார்.
வித்தியாசமான திரைக்கதை, விறுவிறுப்பாக நகர்ந்த கதைகளம் என நம்மை மகாராஜா திரைப்படம் வியப்பில் ஆழ்த்தியது. விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் மாபெரும் வெற்றியை தன்வசப்படுத்தியுள்ளது.
படத்தின் மாபெரும் வெற்றியை தொடர்ந்து USA-வில் நடைபெறும் Film Festival-லில் மகாராஜா திரைப்படம் திரையிடப்படவுள்ளது. இதற்காக விஜய் சேதுபதி, மமதா மோகன்தாஸ் மற்றும் இயக்குனர் நித்திலன் Los Angeles-க்கு சென்றுள்ளனர்.
வசூல்
இந்த நிலையில், மகாராஜா திரைப்படத்தின் இதுவரையிலான வசூல் குறித்து விவரம் வெளியாகியுள்ளது. அதன்படி, இப்படம் உலகளவில் ரூ. 98 கோடி வரை வசூல் செய்துள்ளது என கூறப்படுகிறது.
இதனால் ஓரிரு நாட்களில் மகாராஜா திரைப்படம் ரூ. 100 கோடி பாக்ஸ் ஆபிஸில் இணைந்து மாபெரும் வசூல் சாதனையை படைக்கவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.