Saturday, December 7, 2024
Homeசினிமாவடசென்னை 2வில் இருந்து வெளியேறிய தனுஷ்.. இயக்குனர் வெற்றிமாறன் இல்லை? கடும் அதிர்ச்சியில் ரசிகர்கள்

வடசென்னை 2வில் இருந்து வெளியேறிய தனுஷ்.. இயக்குனர் வெற்றிமாறன் இல்லை? கடும் அதிர்ச்சியில் ரசிகர்கள்


தனுஷ் – வெற்றிமாறன்

தனுஷ் – வெற்றிமாறன் இணைந்தாலே அந்த படம் கண்டிப்பாக மாபெரும் வெற்றியடையும். பொல்லாதவன் படத்தில் துவங்கிய இவர்களுடைய பயணம், ஆடுகளம், வடசென்னை, அசுரன் என தொடர்ந்து நான்கு வெற்றி படங்களை கொடுத்துள்ளனர்.



இதில் வடசென்னை படத்தின் இரண்டாம் பாகத்திற்காக ரசிகர்கள் காத்துகொண்டு இருக்கிறார்கள். கடந்த 2018ஆம் ஆண்டு வெளிவந்த இப்படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இப்படத்தில் தனுஷுடன் இணைந்து அமீர், ஆண்ட்ரியா, ஐஸ்வர்யா ராஜேஷ், சமுத்திரக்கனி, கிஷோர் என பலரும் நடித்திருந்தனர்.

வடசென்னை 2



மாபெரும் ஹிட்டான இப்படத்தின் இரண்டாம் பாகம் எப்போது என்ற கேள்வி அனைவரின் மத்தியிலும் இருந்தது. விடுதலை மற்றும் வாடிவாசல் படங்களை முடித்துவிட்டு வெற்றிமாறன் வடசென்னை 2 படத்தை இயக்குவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் தற்போது வெளிவந்துள்ள செய்தி அனைவருக்கும் அதிர்ச்சியை கொடுத்துள்ளது.

வடசென்னை 2வில் இருந்து வெளியேறிய தனுஷ்.. இயக்குனர் வெற்றிமாறன் இல்லை? கடும் அதிர்ச்சியில் ரசிகர்கள் | Dhanush Out Of Vadachennai 2 Shocking Update

வடசென்னை 2 படத்திலிருந்து தனுஷ் வெளியேறியுள்ளாராம். மேலும் வெற்றிமாறன் இப்படத்தை இயக்கப்போவதில்லை என்றும் வெற்றிமாறனின் துணை இயக்குனர் கார்த்திகேயன் என்பவர் தான் வடசென்னை 2 படத்தை இயக்கப்போகிறார் என்றும் தகவல் வெளியாகியுள்ளது. மேலும் இப்படத்தை வெற்றிமாறன் தயாரிக்கப்போகிறார் என்கின்றனர்.

வடசென்னை 2வில் இருந்து வெளியேறிய தனுஷ்.. இயக்குனர் வெற்றிமாறன் இல்லை? கடும் அதிர்ச்சியில் ரசிகர்கள் | Dhanush Out Of Vadachennai 2 Shocking Update

இதுமட்டுமின்றி ஆமீர் மற்றும் தனுஷ் இருவரும் நடித்த கதாபாத்திரங்களில் அவர்களுக்கு பதிலாக வேறொரு நடிகர்கள் நடிப்பார்கள் என தகவல் தெரிவிக்கின்றனர். விரைவில் இதுகுறித்து அதிகாரபூர்வமான அறிவிப்பு வெளியாகுமாம். ஆனால், இந்த தகவல் எந்த அளவிற்கு உண்மை என தெரியவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments