Friday, April 18, 2025
Homeசினிமாவடிவேலு நிராகரித்த கதையில் ஹீரோவாக நடித்த விஜய்.. படம் சூப்பர் டூப்பர் ஹிட்

வடிவேலு நிராகரித்த கதையில் ஹீரோவாக நடித்த விஜய்.. படம் சூப்பர் டூப்பர் ஹிட்


தளபதி விஜய் தனது திரை வாழ்க்கையில் பல சூப்பர்ஹிட் படங்களை கொடுத்துள்ளார். காதல், ஆக்ஷன், நகைச்சுவை என பல்வேறு விதமான திரைப்படங்களில் நடித்து கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேலாக Entertainment செய்து வருகிறார்.

துள்ளாத மனமும் துள்ளும்

இவர் நடிப்பில் இயக்குநர் எழில் இயக்கத்தில் உருவான திரைப்படம் துள்ளாத மனமும் துள்ளும். இப்படத்தில் விஜய்யுடன் இணைந்து சிம்ரன் நடித்திருப்பார். இப்படம் விஜய்யின் திரை வாழ்க்கையில் மிக முக்கியமான ஒன்றாகும். சுமார் 200 நாட்களுக்கும் மேல் இப்படம் திரையரங்கங்களில் ஓடியுள்ளது.

இந்த நிலையில், இப்படத்தில் முதலில் ஹீரோவாக நடிக்கவிருந்தது விஜய் கிடையாது. வைகை புயல் வடிவேலு தான். ஆங்கிலத்தில் சார்லி சாப்ளின் நடிப்பில் வெளிவந்த சிட்டி லைட்ஸ் படத்தின் தழுவல் தான் இப்படம்.

வடிவேலு நிராகரித்த கதை

இந்த கதையை எழுதி முடித்துவிட்டு, சார்லி சாப்ளின் நடித்த கதாபாத்திரத்தில் வடிவேலுவை நடிக்க வைக்கலாம் என எண்ணி, இயக்குநர் எழில் இப்படத்தின் கதையை முதலில் வடிவேலுவிடம் கூறியுள்ளார். ஆனால், வடிவேலு இதனை நிராகரித்துள்ளார். ‘இந்த கதையை வேறு ஹீரோவிடம் முதலில் கூறுங்கள், யாரும் நடிக்கவில்லை என்றால் நான் நடிக்கிறேன்’ என வடிவேலு கூறினாராம்.

வடிவேலு நிராகரித்த கதையில் ஹீரோவாக நடித்த விஜய்.. படம் சூப்பர் டூப்பர் ஹிட் | Vijay Acted Hero In Vadivelu Rejected Movie

பின் இந்த கதையை விஜய்க்கு கூறியுள்ளார். உடனடியாக இப்படத்தை சூப்பர் குட் பிலிம்ஸ் தயாரிக்க முன் வந்து, படத்தை எடுத்துள்ளனர். விஜய் இப்படத்திற்குள் வந்தபிறகு, அவருக்கு ஏற்றவாறு சில மாற்றங்களையும் செய்துதான் துள்ளாத மனமும் துள்ளும் படத்தை இயக்குநர் எழில் எடுத்துள்ளார்.

படமும் சூப்பர் டூப்பர் ஹிட்டாகியுள்ளது. இந்த தகவலை பிரபல மூத்த பத்திரிகையாளர் பிஸ்மி கூறியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments