வயநாடு மக்கள்
இயற்கை அழகு கொஞ்சம் இடமாக இந்தியர்களால் கொண்டாடப்பட்ட மாநிலம் கேரளா.
அங்கு அடிக்கடி மழையால் பாதிப்பு ஏற்படும், இந்த வருடம் நிலச்சரிவு ஏற்பட்டு இதுவரை 357 பேர் இறந்துள்ளதாக கூறப்படுகிறது, அதோடு 200க்கும் மேற்பட்டோர் காணவில்லை என்கின்றனர்.
ஒவ்வொரு நாளும் அங்கு நிலச்சரிவால் ஏற்பட்ட பாதிப்பு பற்றிய செய்திகள் வரும் போது நெஞ்சம் பதறுகிறது. கேரள மக்கள் எதிர்க்கொண்டுள்ள இந்த சோகத்தில் இருந்து மீண்டுவர மக்கள், பிரபலங்கள் என பண உதவி செய்து வருகிறார்கள்.
அல்லு அர்ஜுன்
சூர்யா, ஜோதிகா, கார்த்திக், மோகன்லால், துல்கர் சல்மான் மம்முட்டி, நஸ்ரியா, பகத் பாசில், நயன்தாரா, விக்னேஷ் சிவன், ராஷ்மிகா மந்தனா என பல பிரபலங்கள் தொடர்ந்து நிதியுதவி செய்து வருகிறார்கள்.
இந்த நிலையில் கேரள மக்களால் கொண்டாடப்பட்ட நடிகர் அல்லு அர்ஜுன் வயநாடு பாதிப்பிற்காக ரூ. 25 லட்சம் நிதி அளித்துள்ளார்.