பிரபல நடிகர்
முன்னணி பிரபலங்களை தங்களது வாழ்க்கையின் முன் உதாரணமாக வைத்து வாழும் ரசிகர்கள் பலர் உள்ளார்கள்.
அவர்கள் செய்யும் நல்ல விஷயங்களை பார்த்து ரசிகர்களும் வாழ்க்கையில் செய்ய ஆரம்பித்துள்ளார்கள். அப்படி பெரும்பாலான பிரபலங்கள் மற்றவர்களுக்கு உதவுவதை தங்களது ரசிகர்களுக்கு அதிகம் செய்து காட்டியுள்ளனர்.
அப்படி ஒரு பிரபலம் வருடா வருடம் நன்கொடை கொடுக்கும் தகவல் தான் சமூக வலைதளங்களில் வலம் வருகிறது.
யார் அவர்
அமிதாப் பச்சன், சல்மான் கான், சோனு சூட் தொடங்கி தமிழ் விஜய், அஜித் உள்ளிட்ட பலர் சமூக நலன்கனுக்காக நன்கொடை கொடுத்து கூருகிறார்கள்.
அப்படி தெலுங்கு சினிமாவில் பிரின்ஸ் ஆஃப் டோலிவும் என அழைக்கப்படும் மகேஷ் பாபு பெரிய தொகை நன்கொடை கொடுத்து வருகிறார்.
இந்திய திரையுலகில் பல வெற்றிப் படங்களை கொடுத்த நடிகர் மகேஷ் பாபு 40க்கும் மேற்பட்ட படங்களில் பணியாற்றியுள்ளார், தயாரிப்பாளராகவும் இருக்கிறார்.
படங்கள் நடிப்பது மூலம் அதிகம் சம்பாதிக்கும் மகேஷ் பாபு ஒவ்வொரு ஆண்டும் ரூ. 25 முதல் ரூ. 30 கோடி வரை ஏழைகளுக்காக செலவிடப்படுவதாக கூறப்படுகிறது.