சிங்கப்பெண்ணே
சிங்கப்பெண்ணே சீரியலில் அழகனால் ஆரம்பித்தது இப்போது ஆனந்தி ஒரு கொலையாளி என்ற வரை கொண்டு வந்திருக்கிறது.
ஆனந்தி மீது காதல் கொண்ட அன்பு, அழகனாக அவருக்கு கடிதம் எழுதி வந்தார், அவரும் ரசித்து வந்தார். கடிதத்தில் வந்த அழகன் நான் தான் என்று இடையில் நந்தா ஏமாற்ற அங்கு தான் பிரச்சனை ஆரம்பித்தது.
நந்தா ஆனந்தியை ஏமாற்றி கல்யாணம் வரை கொண்டு சென்று இப்போது அது வேறு பிரச்சனையில் சிக்க வைத்துள்ளது.
இன்றைய புரொமோ
நந்தாவை கொலை செய்த சந்தேகத்தில் ஆனந்தியை போலீஸ் கைது செய்ய எப்படியோ வெளியே வந்துவிட்டார் ஆனந்தி.
இன்றைய எபிசோடில் வாடர்ன் ஆனந்தியை தனியாக இருக்க வைத்துள்ளார், வெளியே எங்கே சென்றாலும் என்னை கேட்டுவிட்டு தான் செல்ல வேண்டும் என்று கூறுகிறார்.
அதோடு அன்புவை நேரில் சந்தித்த ஆனந்தி, இவ்வளவு பிரச்சனை நடந்தும் அழகன் நேரில் என்னை பார்க்க வரவில்லை என வருத்தப்படுகிறார். இதனால் அன்பு என்ன கூறுவது என்று தெரியாமல் ஷாக் ஆகி நிற்கிறார்.