இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா சென்னை நுங்கம்பாக்கம் லேக் ஏரியா பகுதியில் ஒரு பெரிய வீட்டில் வாடகைக்கு குடியிருந்து வருகிறார்.
அந்த வீட்டின் உரிமையாளர் சில தினங்களுக்கு முன்பு போலீசில் புகார் அளித்தார். யுவன் ஷங்கர் ராஜா 20 லட்சம் ரூபாய் வாடகையை கொடுக்காமல் இருக்கிறார் என்றும், தற்போது தகவல் கூட கொடுக்காமல் வீட்டை காலி செய்வதாகவும் அந்த புகாரில் கூறப்பட்டு இருந்தது.
நஷ்டஈடு கேட்கும் யுவன்.. போலீசார் விசாரணை
இந்நிலையில் போலீசில் புகார் அளித்து தனக்கு மனஉளைச்சல் அளித்ததாக கூறி 5 கோடி மான நஷ்டஈடு கேட்டு யுவன் ஷங்கர் அந்த வீட்டின் உரிமையாளருக்கு நோட்டீஸ் அனுப்பி இருக்கிறார்.
இந்நிலையில் தற்போது போலீசார் யுவன் ஷங்கர் ராஜாவிடம் இதுபற்றி விசாரணை நடத்த முடிவெடுத்து இருக்கின்றனர்.