வெற்றிமாறன்
முன்னணி இயக்குனர்களுள் ஒருவர் வெற்றிமாறன். இவர் இயக்கத்தில் வந்த விடுதலை பார்ட் -1 படம் மிகப்பெரிய ஹிட் படமாக அமைந்தது.
அந்த படத்தை தொடர்ந்து தற்போது விடுதலை பார்ட் – 2 ஷூட்டிங் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இந்த நிலையில் அவர் சிறுகதைகளையும், நாவல்களையும் படமாகும் முயற்ச்சியில் இறங்கிருக்கிறார்.
இதனால் சி.சு.செல்லப்பா எழுதிய வாடிவாசல் என்ற குறுநாவலை படமாக்கவிருக்கிறார் வெற்றிமாறன். சூர்யா கதாநாயகனாக நடிக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு தொடர்ந்து தள்ளிபோய்க்கொண்டே இருக்கிறது.
வாடிவாசல் அப்டேட்
இந்த நிலையில் வாடிவாசல் படத்தின் ஷூட்டிங் இன்னும் தொடங்கபடவில்லை என்பது ரசிகர்களுக்கு பெரும் வருத்தத்தை கொடுத்து வந்தது.
இப்படியொரு சூழலில் விடுதலை பார்ட் – 2 ஷூட்டிங் முடிந்த பிறகு வாடிவாசல் படத்தின் ஷூட்டிங் தொடங்கப்படும் என கூறுகின்றனர். இந்த அறிவிப்பை கேட்டவுடன் சூர்யாவின் ரசிகர்கள் பெரும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
மேலும் வாடிவாசல் படத்திற்கான வேலைகளும் ஒரு பக்கம் நடந்துகொண்டு தான் இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது. இப்படம் 2026ஆம் ஆண்டு வெளியாகும் என்று சொல்லப்படுகிறது.