வானத்தை போல
சீரியல்களுக்கு பெயர் போன தொலைக்காட்சி என்றால் அது சன் டிவி தான்.
இந்த தொலைக்காட்சியில் எத்தனையோ சீரியல்கள் ஒளிபரப்பாகி இருக்கிறது, அதில் நிறைய தொடர்கள் 1000 எபிசோடுகளுக்கு மேல் சென்று சாதனை படைத்துள்ளது.
அப்படி வெற்றிகரமாக ஓடிய தொடர்களில் ஒன்று வானத்தை போல. கடந்த 2020ம் ஆண்டு தொடங்கப்பட்ட இந்த தொடர் 2024ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் தான் முடிவடைந்தது.
தொடர் மொத்தமாக 1134 எபிசோடுகள் தொடர் ஒளிபரப்பாகிறது.
திருமணம்
இந்த தொடர் ஆரம்பிக்கும் போது பாசுமுள்ள அண்ணனாக சின்னராசு கதாபாத்திரத்தில் தமன்குமார் தான் நடிக்க தொடங்கினார். ஆனால் பாதியிலேயே தொடரில் இருந்து விலக அவருக்கு பதில் ஸ்ரீகுமார் நடித்து வந்தார்.
தற்போது வானத்தை போல தொடரில் ஆரம்பத்தில் நடித்த தமன்குமாருக்கு கோலாகலமாக திருமணம் முடிந்துள்ளது.
புதியதாக இணைந்துள்ள இந்த திருமண ஜோடியின் புகைப்படம் வெளியாக ரசிகர்கள் வாழ்த்து கூறி வருகிறார்கள்.