Saturday, December 7, 2024
Homeசினிமாவாழை படத்தில் நடித்ததை பற்றி கூறிய திவ்யா துரைசாமி

வாழை படத்தில் நடித்ததை பற்றி கூறிய திவ்யா துரைசாமி


திவ்யா துரைசாமி

இஸ்பேட் ராஜாவும் இதய ராணியும் என்ற படத்தின் மூலம் நடிகையாக தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் திவ்யா துரைசாமி.

தற்போது, விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் போட்டியாளராக பங்கு பெற்று அதிகம் பிரபலமாகியுள்ளார்.

இதை தொடர்ந்து, இவர் நாயகியாக நடித்து சமீபத்தில்,மாரி செல்வராஜ் இயக்கத்தில் வெளிவந்த படம் வாழை.

படத்தில் வேம்பு என்ற கேரக்டரில் தன்னுடைய முழு உழைப்பையும் போட்டு நடித்திருப்பார் திவ்யா துரைசாமி.

இந்த படம் மாரி செல்வராஜின் வாழ்க்கையில் நடந்த சம்பவத்தை மையமாக வைத்து எடுக்கப்பட்டதால் மாபெரும் வெற்றி பெற்று 4 நாட்களில் உலகளவில் ரூ. 12 கோடிக்கும் மேல் வசூல் செய்துள்ளது.

வாழை படம்



இந்த நிலையில், வாழை படத்திற்காக திவ்யா துரைசாமி பேட்டி ஒன்று கொடுத்துள்ளார்.

அந்த பேட்டியில் அவர் கூறுகையில், நான் ஜாலியாக மற்றவர்களுடன் பழகும் குணம் கொண்டவள். ஆனால் வாழை படத்திற்காக 6 மாதம் யாரிடமும் பேசாமல் மௌனம் காத்து வந்தேன் எனவும், வேம்பு கேரக்டரில் என் உண்மை குணம் வெளிப்படாமல் இருக்க இவ்வாறு செய்ததாகவும் கூறினார்.



மேலும், இந்த கேரக்டருக்காக நான் மிகவும் உழைத்துள்ளேன். தினமும் வாழைத் தாரை தூக்கி தூக்கி என் தோள்பட்டையில் மிகப்பெரிய அளவில் வலி ஏற்பட்டது.

அந்த வலி சரியாவதற்கு பல மாதங்கள் தேவபட்டதாகவும் ஆனால், தற்போது எனக்கு கிடைக்கும் பாராட்டுகளை பார்க்கும்போது மிகவும் மகிழ்ச்சியாக இருப்பதாகவும் அந்த பேட்டியில் திவ்யா துரைசாமி கூறியுள்ளார். 

மிகப்பெரிய அளவில் வலி ஏற்பட்டது.. வெளிப்படையாக வாழை படத்தில் நடித்ததை பற்றி கூறிய திவ்யா துரைசாமி | Divya Duraisaamy About Vaazhai Movie Experience



RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments