Sunday, September 8, 2024
Homeசினிமாவாழை படத்தை பார்த்து கண்கலங்கி முத்தமிட்ட பிரபல இயக்குனர்!!

வாழை படத்தை பார்த்து கண்கலங்கி முத்தமிட்ட பிரபல இயக்குனர்!!


மாரி செல்வராஜ்

பரியேறும் பெருமாள், கர்ணன், மாமன்னன் போன்ற படங்களை இயக்கி தமிழ் சினிமாவில் பிரபலமானவர் மாரி செல்வராஜ்.

தற்போது இவர் இயக்கத்தில் நாளை வெளிவர உள்ள படம் வாழை. இந்த படத்தில் கலையரசன், திவ்யா துரைசாமி, நிகிலா விமல், பொன்வேல் மற்றும் ராகுல் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.



மாரி செல்வராஜ், தன் வாழ்க்கையில் நடந்தவற்றை வைத்து இந்த படத்தை இயக்கியுள்ளார் என அவரே கூறியிருக்கும் நிலையில், இந்த படத்தை பார்த்து விட்டு பல இயக்குனர்கள் மற்றும் நடிகர்கள் என அனைவரும் பாராட்டி வருகின்றனர்.

முத்தமிட்ட இயக்குனர்

இந்த நிலையில், வாழை படத்தை பிரத்யேக காட்சியில் இயக்குனர் பாலாவிற்கும் காண்பித்தார் மாரி செல்வராஜ் அந்த படத்தை பார்த்து விட்டு, கலங்கிப் போய் மாரியிடம் சென்று இத்தனை சோகங்களை மனதில் வைத்துக்கொண்டு தான் படங்களை எடுக்கிறாயா என்று கண்கலங்கியபடி கட்டி அணைத்து முத்தம் கொடுத்தார் பாலா.



தற்போது இந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரல் ஆகி வருகின்ற நிலையில், மாரி செல்வராஜ் தனது ட்விட்டர் பக்கத்தில் இந்த புகைப்படத்தை பதிவிட்டு மிகவும் நன்றி பாலா சார் என்று எழுதியுள்ளார்.

வாழை படத்தை பார்த்து கண்கலங்கி முத்தமிட்ட பிரபல இயக்குனர்!! | Director Bala Reaction After Watched Vaazhai Movie

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments