Friday, January 17, 2025
Homeசினிமாவாழ்க்கையில் இந்த 2 - ம் மிகவும் முக்கியம்.. மனம் திறந்த நயன்தாரா

வாழ்க்கையில் இந்த 2 – ம் மிகவும் முக்கியம்.. மனம் திறந்த நயன்தாரா


நயன்தாரா 

இன்று தென்னிந்திய சினிமாவில் லேடி சூப்பர் ஸ்டார் என்று ரசிகர்களால் அன்போடு அழைக்கப்படுபவர், நயன்தாரா. தற்போது இவர் ராக்காயி என்ற மிரட்டல் ஆக்‌ஷன் படத்தில் நடித்து வருகிறார்.

சினிமாவில் நடிப்பதை தாண்டி தன் குழந்தைகள் மற்றும் கணவருடன் நேரத்தை செலவிடுவதை வழக்கமாக வைத்துள்ளார் நயன்தாரா.

இந்நிலையில், நயன்தாரா கடந்த ஆண்டு அவர் தொடங்கிய பெமி 9 என்ற நாப்கின் நிறுவனம் கொண்டாட்ட நிகழ்ச்சியில் தன் கணவருடன் கலந்து கொண்டு பல விஷயங்களை பகிர்ந்துள்ளார்.

மனம் திறந்த நயன்தாரா 

தற்போது, அவர் பேசிய விஷயங்கள் பலரின் கவனத்தை பெற்றுள்ளது. அதில், ” நான் என் வாழக்கையில் எப்போதும் இந்த 2 விஷயங்களை நம்புவேன், ஒன்று தன்னம்பிக்கை மற்றொன்று சுயமரியாதை.

வாழ்க்கையில் இந்த 2 மிகவும் முக்கியம்.. மனம் திறந்த நயன்தாரா | Nayanthara Talk About Self Respect

இது இரண்டும் இருந்தால் போதும் நம்மை யார் கீழே இறக்க வேண்டும் என நினைத்தாலும், அதை அவர்களால் செய்ய முடியாது. நாம் முன்னேறிக்கொண்டே தான் இருப்போம்” என்று கூறியுள்ளார்.  

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments