Friday, September 20, 2024
Homeசினிமாவிஜயகாந்த் மகன் நடிக்கும் புது படத்தின் அப்டேட்..

விஜயகாந்த் மகன் நடிக்கும் புது படத்தின் அப்டேட்..


விஜயகாந்த்

தமிழ் சினிமாவில் முக்கிய நடிகராக வலம் வந்தவர் விஜயகாந்த். சினிமா மட்டுமின்றி அரசியலிலும் நுழைந்து தமிழ்நாடு எதிர்க்கட்சி தலைவராக மக்களுக்கு பல நன்மைகளை செய்தவர். இவர் பல வெற்றி படங்களை சினிமாவில் கொடுத்து ரஜினி மற்றும் கமல் போன்ற முன்னணி நடிகர்களின் வரிசையில் இணைந்தார்.

கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் உடல்நல குறைவு காரணமாக மரணமடைந்தார். இவருடைய மறைவு தமிழநாட்டில் அனைவருக்கும் பெரும் அதிர்ச்சியை கொடுத்தது.  

சண்முக பாண்டியன் புதிய படம்



விஜயகாந்துக்கு இரண்டு மகன்கள் உள்ளனர். தற்போது, இவருடைய இளைய மகன் சண்முக பாண்டியன் வருத்தப்படாத வாலிபர் சங்கம், ரஜினி முருகன் போன்ற படங்களை இயக்கிய பொன்ராம் தான் இப்படத்தை இயக்கவுள்ளார் உள்ளார். மேலும் இப்படத்தில் நடிகர் சரத்குமார் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்க உள்ளது.

விஜயகாந்த் மகன் நடிக்கும் புது படத்தின் அப்டேட்.. இப்படத்தின் இயக்குனர் சிவகார்த்திகேயன் படத்தை இயக்கியவரா! | Shanmuga Pandian New Movie Update



இந்த நிலையில், மறைந்த நடிகரும், முன்னாள் தேமுதிக தலைவருமான விஜயகாந்தின் 71-வது பிறந்தநாள் விழா அவரது வீட்டில் நேற்று கொண்டாடப்பட்டது. இதன் காரணமாக சண்முக பாண்டியன் நடிக்கவுள்ள புதிய படத்தின் ஸ்க்ரிப்டை படக்குழுவினர் அனைவரும் அவரது நினைவிடத்தில் வைத்து ஆசி பெற்றனர்.

விஜயகாந்த் மகன் நடிக்கும் புது படத்தின் அப்டேட்.. இப்படத்தின் இயக்குனர் சிவகார்த்திகேயன் படத்தை இயக்கியவரா! | Shanmuga Pandian New Movie Update

இந்த படத்தின் இயக்குனர் பொன்ராம் அவரது ட்விட்டர் பக்கத்தில் விஜயகாந்த் நினைவிடத்தில் ஆசி பெற்ற புகைப்படங்களை பகிர்ந்து உள்ளார். இந்த படத்தை ஸ்டார் சினிமாஸ் நிறுவனம் தயாரிக்க உள்ளது. இது அவர்களுடைய முதல் தயாரிப்பு என்பது குறிப்பிடத்தக்கது. மேலும், இப்படத்தை யுவன் சங்கர் ராஜா இசையமைக்க உள்ளார்.



RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments