சிறகடிக்க ஆசை
சீரியல்களின் கதை நாளுக்கு நாள் விறுவிறுப்பாக இருந்தால் தான் நன்றாக இருக்கும்.
அப்படி ஒரு விஷயம் முடிந்ததும் இன்னொரு விஷயம் என கதையின் விறுவிறுப்பை குறைக்காமல் ஒளிபரப்பாகி வரும் தொடர் தான் சிறகடிக்க ஆசை.
இந்த தொடரில் இந்த வார புரொமோ அந்த கடிதம் அனுப்பியது யார் என்பதை கண்டுபிடித்த முத்து, எதற்காக இப்படி கடிதம் அனுப்புகிறார், அதற்கு பின் என்ன இருக்கிறது என்பதை கண்டுபிடிப்பேன் என்கிறார்.
நாளைய புரொமோ
இன்றைய எபிசோட் முடிவில் நாளைய எபிசோடிற்கான புரொமோ வெளியாகியுள்ளது.
அதில், அண்ணாமலை வீட்டில் கொலு வைக்க விஜயா தனது கணவர் சொன்னதை நம்பி பாடுகிறார்.
அலைப்பாயுதே கண்ணா என்று பாடி அனைவரையும் தெரித்து ஓடலாமா என நினைக்க வைக்கிறார், அப்படி அவர் பாட அண்ணாமலை திடீரென ஒன்ஸ் மோர் கேட்கிறார். அதைக்கேட்டதும் அனைவருமே ஷாக் ஆகிறார்கள்.