சிறகடிக்க ஆசை
தமிழ் சின்னத்திரையில் சில வாரங்களுக்கு முன்பு நம்பர் 1 தொடராக இருந்தது சிறகடிக்க ஆசை சீரியல்.
முத்து மற்றும் மீனா ஜோடியை மையமாக வைத்து தொடங்கப்பட்ட இந்த தொடரின் கதைக்களம் விறுவிறுப்பாக செல்ல ரசிகர்களும் அதிகமாகி வருகிறார்கள்.
கடைசியாக தொடரில் விஜயா, ஸ்ருதி மற்றும் மீனா சில வகையில் டார்ச்சர் செய்ய அதனால் விஜயா செம கோபத்திற்கு ஆளாகிறார். அவரின் கோபத்தை பயன்படுத்தி எரியும் தீயில் எண்ணை ஊற்றுகிறார் ரோஹினி.
இதனால் விஜயா மற்றும் ரோஹினி, ஸ்ருதி அம்மாவிடம் மீனாவுடன் சேர்ந்து உங்களது மகள் மோசமாக நடந்துகொள்கிறார் என கூறுகிறார்.
அடுத்த வாரம்
இதனால் ஸ்ருதியின் அம்மா மீனாவின் அம்மாவிடம் சென்று ஏதோ சண்டை போட்டதாக தெரிகிறது. இதனை கேள்விப்பட்ட முத்து வீட்டிற்கு வந்து ஸ்ருதியிடம் சண்டை போடுகிறார்.
அவர்களின் சண்டையை கேட்டு விஜயா செம சந்தோஷம் அடைகிறார். அடுத்த வார கதைக்களம் மிகவும் சண்டையாகவே செல்லும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.