ஐஸ்வர்யா ராய்
உலக அழகி என்ற பட்டத்தை வென்ற பிறகு சினிமாவில் நடிகையாக அறிமுகமானவர் ஐஸ்வர்யா ராய்.
இவர் ஷங்கர் இயக்கத்தில் வெளியான ஜீன்ஸ் படத்தில் கதாநாயகியாக சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி தமிழ் சினிமா ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார்.
இந்த படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றதை தொடர்ந்து ராஜீவ் மேனன் இயக்கத்தில் “கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன்” என்ற திரைப்படத்தில் அஜித், மம்முட்டி போன்ற முன்னணி நடிகர்களுடன் நடித்திருந்தார்.
விஜய்யுடன் நடிக்க மறுத்த ஐஸ்வர்யா ராய்
இந்த படத்திற்கு பிறகு ஐஸ்வர்யா ராய் விஜய்யுடன் நடிப்பார் என எதிர்பாக்கப்பட்டது. இதற்காக, தமிழன் படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடிக்க வைக்க ஐஸ்வர்யா ராயிடம் பேச்சுவார்த்தை நடைபெற்றுள்ளதாம்.
ஆனால், அந்த வாய்ப்பை ஐஸ்வர்யா மறுத்துள்ளார்.
இது குறித்த காரணத்தை, பிரபல பத்திரிகையாளர் பேட்டி ஒன்றில் கூறி உள்ளார்.
அதில் “தமிழன் படத்திற்காக படக்குழுவினர் ஐஸ்வர்யா ராய்யை அணுகினர். ஆனால் அவர் விஜய்யுடன் நான் நடிக்க மாட்டேன் அவர் என்னை விட வயதில் சின்ன பையன் அதனால் எங்கள் ஜோடி பொருத்தம் நன்றாக இருக்காது என்று கூறினார்” என பத்திரிகையாளர் தெரிவித்துள்ளார்.
இதனால், 2000 – ம் ஆண்டு உலக அழகி பட்டம் வென்ற நடிகை பிரியங்கா சோப்ரா இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.