விஜய்யின் கோட்
வெங்கட் பிரபு சினிமா பயணத்தில் ஒரு விஷயம் குறையாகவே இருந்தது, அதாவது தளபதி படத்தை இயக்குவது தான்.
மங்காத்தா படத்திற்கு பிறகு வெங்கட் பிரபுவிடம் ரசிகர்கள் அதிகம் கேட்ட கேள்விக்கு தற்போது பதில் கிடைத்துவிட்டது, தளபதியுடன் கூட்டணி அமைத்து படத்தையும் எடுத்து முடித்துவிட்டார்.
கோட் என்ற படத்தை வெங்கட் பிரபு விஜய்யை வைத்து பிரம்மாண்டமாக எடுத்துள்ளார். ரூ. 300 கோடி பட்ஜெட்டில் தயாராகி இருக்கும் இப்படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா தான் இசை.
படத்தின் 3 சிங்கிள் பாடல்கள் இதுவரை வெளியாகி மாஸ் செய்துள்ளன.
புரொமோஷன்
செப்டம்பர் 5ம் தேதி விஜய்யின் கோட் பட ரிலீஸ், எனவே ஆகஸ்ட் 19ம் தேதி இப்படத்தின் டிரைலர் வெளியாக வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.
அதேசமயம் படத்தின் இசை வெளியீட்டு விழா நடப்பதில் சந்தேகம் என கூறப்படும் நிலையில் படத்தின் புரொமோஷனை வித்தியாசமாக செய்ய வெங்கட் பிரபு பிளான் போட்டு வருகிறாராம்.
சில வித்தியாசமான புரொமோவை வெளியிட்டு வெங்கட் பிரபு புரொமோஷன் செய்ய இருப்பதாக கூறப்படுகிறது. விஜய் ஓகே சொன்னால் அவரை வீடியோவில் பயன்படுத்தவும் வெங்கட் பிரபு பிளான் போட்டுள்ளாராம்.