விஜய்யின் கோட்
வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய் முதன்முறையாக நடித்துள்ள திரைப்படம் கோட்.
The Greatest Of All Time என பெயரிடப்பட்டுள்ள இந்த படத்தில் விஜய் டபுள் வேடத்தில் நடிக்க சினேகா, பிரசாந்த், லைலா, பிரபுதேவா, மீனாட்சி சவுத்ரி, மோகன், அஜ்மல், ஜெயராம், பிரேம்ஜி, அரவிந்த் ஆகாஷ், த்ரிஷா, சிவகார்த்திகேயன் என பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்துள்ளனர்.
கடந்த செப்டம்பர் 5ம் தேதி வெளியான இப்படம் 4 நாள் முடிவில் உலகம் முழுவதும் இதுவரை ரூ. 288 கோடி வரை வசூலித்துள்ளதாம். இதனை தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தியே உறுதிப்படுத்தியிருந்தார்.
விஜயகாந்த்
இந்த படத்தில் சிவகார்த்திகேயன், த்ரிஷா சிறப்பு வேடத்தில் நடித்ததை தாண்டி சிறப்பான ஒரு விஷயம் AI தொழில்நுட்பம் மூலம் வந்த விஜயகாந்த் காட்சிகள் தான்.
ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பு பெற்றுவரும் நிலையில் விஜயகாந்துக்கு விஜய் செய்யும் மரியாதையாகவே பார்க்கப்படுகிறது.
தற்போது விஜயகாந்திற்கு படத்தில் குரல் கொடுத்தது யார் என்ற தகவல் வலம் வருகிறது. விஜயகாந்திற்கு, விஜய்யின் கோட் படத்தில் குரல் கொடுத்தது நடிகர் மணிகண்டன் தானாம்.
பல குரல்களில் பேசுபவர் என்பதால் மணிகண்டனுக்கு இந்த வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.