விஜய்யின் கோட்
நடிகர் விஜய் திரைப்பயணத்தில் அவரது கடைசிப் படத்திற்கு முந்தைய படமாக உருவாகியுள்ள கோட்.
Greatest Of All Time என பெயரிடப்பட்டுள்ள இப்படத்தை வெங்கட் பிரபு இயக்க AGS நிறுவனம் தயாரித்துள்ளது.
ரூ. 400 கோடி வரை படத்திற்கான பட்ஜெட் வந்ததாகவும், விஜய்யின் சம்பளம் ரூ. 200 கோடி என்ற தகவலையும் தயாரிப்பாளர் தரப்பில் இருந்து தகவல் வெளியானது.
விஜய்க்கு ஜோடியாக மீனாட்சி சௌத்ரி நடிக்க பிரசாந்த், மோகன், பிரபுதேவா, அஜ்மல், லைலா, சினேகா, வெங்கட் பிரபு என பலர் நடித்துள்ளனர்.
Remix பாடல்
அண்மையில் யுவன் ஷங்கர் ராஜா பிறந்தநாள் ஸ்பெஷலாக விஜய்யின் கோட் படத்தின் 4வது பாடல் வெளியாகி இருந்தது.
படம் வரும் செப்டம்பர் 5ம் தேதி படு மாஸாக வெளியாக இருக்கிறது, படத்திற்கான ப்ரீ புக்கிங் எல்லாம் அதிரடியாக நடக்கிறது.
இந்த நிலையில் விஜய்யின் கோட் படத்தின் பாடல்கள் குறித்து அண்மையில் ஒரு பேட்டியில் செம நியூஸ் வெளியிட்டுள்ளார் பிரேம்ஜி அமரன்.
யுவன் ஷங்கர் ராஜா மற்றும் பிரேம்ஜி இருவரும் சேர்ந்து இளையராஜாவின் பழைய பாடலை Remix செய்துள்ளதாக கூறப்படுகிறது.
அதோடு அந்த பாடல் வெளிநாட்டு லொகேஷனில் இடம்பெற்றுள்ளதாக பிரேம்ஜி ரசிகர்கள் கொண்டாடும் வகையில் சூப்பர் தகவல் கூறியுள்ளார்.