கோட் படம்
தமிழ் சினிமாவில் பெரும் எதிர்பார்ப்புடன் வெளிவந்த படம் GOAT.
நடிகர் விஜய் நடிப்பில் வெங்கட் பிரபு இயக்கத்தில் செப்டம்பர் 5ம் தேதி வெளிவந்த இந்த படத்தை ரசிகர்கள் பெரிதும் கொண்டாடி வருகின்றனர்.
இப்படத்தில் இரட்டை வேடத்தில் ஹீரோ மற்றும் வில்லன் என இரு வேறு கதாபாத்திரத்தில் விஜய் நடித்து மாஸ் காட்டி இருப்பார்.
மேலும், இந்த படத்தில் 90ஸ் முன்னணி நட்சத்திரங்களான பிரஷாந்த், பிரபு தேவா, சினேகா, லைலா, மீனாட்சி சவுத்ரி, மோகன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.
யுவன் ஷங்கர் ராஜா இசையமைப்பில் ஏஜிஎஸ் நிறுவனம் தயாரித்து ரூ. 400 கோடி பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட இந்த படம் வெளிவந்த முதல் நாளிலே ரூ. 126 கோடி வசூலித்து சாதனை படைத்தது.
தற்போது 6 நாட்களை கடந்த இந்த படம் உலகம் முழுவதும் ரூ. 312 கோடி வரை வசூல் செய்துள்ளது என கூறப்படுகிறது.
ரசிகர்கள் செயல்
இந்த நிலையில், விஜய் நடித்த GOAT திரைப்படம் மாபெரும் வெற்றி அடைந்து ரூ. 1000 கோடிக்கு மேல் வசூல் செய்ய வேண்டும் என்ற எண்ணத்தில் சென்னை போரூர் அடுத்த கோவூரில் உள்ள கோவிலில் தவெகவினர் சிறப்பு பிரார்த்தனை செய்து வருகின்றனர்.
அவர்களின் பிரார்த்தனை நிறைவேற வேண்டும் என பலரும் கமெண்ட் செய்து வருகின்றனர்.