Thursday, April 24, 2025
Homeசினிமாவிஜய்யின் ஜனநாயகன் படத்தின் பாடலுக்காக அனிருத்தின் சூப்பர் பிளான்.. இவருடன் கூட்டணியா?

விஜய்யின் ஜனநாயகன் படத்தின் பாடலுக்காக அனிருத்தின் சூப்பர் பிளான்.. இவருடன் கூட்டணியா?


ஜனநாயகன்

தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி இருக்கிறார் விஜய்.

அடுத்த ஆண்டு தமிழகத்தில் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது, இதில் விஜய்யின் கட்சி களமிறங்குகிறது, அதற்கான பணியில் நடிகர் விஜய் ஈடுபட்டு வருகிறார்.

ஆனால் முழுநேர அரசியல்வாதியாக அவர் இன்னும் இறங்கவில்லை, காரணம் அவர் நடிக்கும் கடைசி படமான ஜனநாயகன் படத்தின் படப்பிடிப்பு நடந்து வருகிறது.
இப்படத்தின் படப்பிடிப்பு சென்னை போரூர் செட்டியார் அகரம் பகுதியில் நடந்து வருகிறது.

சமீபத்திய படப்பிடிப்பு தளத்தில் இருந்து வெளியே வந்து தன்னை காண வந்த ரசிகர்களை நோக்கி சிரிப்புடன் கையசைத்துவிட்டு சென்றார்.


புதிய கூட்டணி


விஜய்யின் கடைசி படமான ஜனநாயகத்திற்கு அனிருத் தான் இசை. விஜய்-அனிருத் கூட்டணி அமைந்தாலே அப்பட பாடல்களில் சில மேஜிக் அமையும், இதிலும் இருக்கும் என ரசிகர்கள் நம்புகிறார்கள்.

விஜய்யின் ஜனநாயகன் படத்தின் பாடலுக்காக அனிருத்தின் சூப்பர் பிளான்.. இவருடன் கூட்டணியா? | Anirudh Super Plan For Jananayagan Movie

தற்போது வந்த புது தகவல் என்னவென்றால், இந்த படத்தில் இடம்பெறும் ஒரு பாடலைப் பாட லேட்டஸ்ட்டாக ட்ரண்ட்டிங் பாடகராக வலம்வரும் ஹனுமான்கைண்ட்டிடம் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறாராம் இசையமைப்பாளர் அனிருத்.

இந்த தகவல் உண்மையா, இவர்கள் கூட்டணி அமைந்ததா என்பதை பொறுத்திருந்து காண்போம்.  

விஜய்யின் ஜனநாயகன் படத்தின் பாடலுக்காக அனிருத்தின் சூப்பர் பிளான்.. இவருடன் கூட்டணியா? | Anirudh Super Plan For Jananayagan Movie

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments