Sunday, November 3, 2024
Homeசினிமாவிஜய்யின் தவெக மாநாட்டிற்கு சென்ற இளைஞர் விபத்தில் மரணம்.. அதிர்ச்சி சம்பவம்

விஜய்யின் தவெக மாநாட்டிற்கு சென்ற இளைஞர் விபத்தில் மரணம்.. அதிர்ச்சி சம்பவம்


தவெக முதல் மாநாடு

நடிகர் விஜய் கடந்த பிப்ரவரி மாதம் தனது தமிழக வெற்றிக்கழகத்தின் கட்சியை துவங்கினார். பின் தனது கட்சியின் கொடி மற்றும் பாடலை அறிமுகப்படுத்தினார்.

மேலும் தவெக கட்சியின் முதல் மாநாட்டை எதிர்பார்த்து அனைவரும் காத்திருந்த நிலையில் இன்று பிரமாண்டமான முறையில் நடைபெறவுள்ளது. விக்ரவாண்டி வி சாலையில் நடக்கும் இந்த மாநாட்டிற்கு 5 லட்சம் பேர் வருவார்கள் என கூறப்படுகிறது.

விபத்தில் மரணம்

வெவ்வேறு ஊரில் இருந்து பலரும் தவெக மாநாட்டிற்கு வந்து கொண்டிருக்கும் நிலையில், எதிர்பாராத விதமாக பெரும் துயரம் நடந்துள்ளது. தவெக மாநாட்டிற்கு சென்றுகொண்டிருந்த இரண்டு இளைஞர்கள் மரணமடைந்துள்ளார்.

சென்னை அண்ணா சாலையில் டி.எம்.எஸ். மெட்ரோ ரயில் நிலையம் அருகே லாரி மீது பைக் மோதி விபத்து எற்பட்டுள்ளது. இதில் பைக்கில் இருந்த இளைஞர் மரணமடைந்துள்ளார். மற்றொருவர் படுகாயத்துடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

விஜய்யின் தவெக மாநாட்டிற்கு சென்ற இளைஞர் விபத்தில் மரணம்.. அதிர்ச்சி சம்பவம் | Vijay Tvk Maanaadu Fan Died

மேலும் நன்மங்கலத்தில் இருந்து தவெக மாநாட்டுக்கு சென்ற வேன் சேலையூர் சந்தோசபுரம் அருகே கவிழ்ந்து விபத்து ஏற்பட்டுள்ளது. நல்வாய்ப்பாக 11 பேர் உயிர் தப்பியுள்ளனர். ஓட்டுநர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிட்டுள்ளார் என தகவல் வெளியாகியுள்ளது.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments