Wednesday, March 26, 2025
Homeசினிமாவிஜய்யின் 10 படங்களை நிராகரித்த முன்னணி இசையமைப்பாளர்! யார் தெரியுமா

விஜய்யின் 10 படங்களை நிராகரித்த முன்னணி இசையமைப்பாளர்! யார் தெரியுமா


விஜய் உடன் ஒரு படத்திலாவது பணியாற்ற வேண்டும் என்பது தான் பலரது கனவாக இருக்கும். ஆனால் அவரது படத்திற்கே இசையமைக்க மாட்டேன் என ஒரு இசையமைப்பாளர் கூறி இருக்கிறார். யார் தெரியுமா?

தமிழ் சினிமாவில் முன்னணி இசையமைப்பாளர்களில் ஒருவர் ஹாரிஸ் ஜெயராஜ். பல எவர்க்ரீன் பாடல்களை கொடுத்திருக்கும் அவர் சமீப காலமாக பெரிய ஹீரோ படங்களுக்கு இசையமைப்பதை தவிர்த்து வருகிறார்.

அவர் கடைசியாக ஜெயம் ரவியின் பிரதர் படத்திற்கு கடந்த வருடம் இசையமைத்து இருந்தார்.

விஜய்யின் 10 படங்களை நிராகரித்துவிட்டேன்

இந்நிலையில் தற்போது ஹாரிஷ் ஜெயராஜ் அளித்த பேட்டி ஒன்றில் தான் நடிகர் விஜய்யின் 10 படங்களை நிராகரித்ததாக கூறியிருக்கிறார்.

அவர் நண்பன் படத்திற்கு இசையமைக்கும் முன்பு விஜய்யின் சுமார் 10 படங்கள் தன்னிடம் வந்ததாகவும் அவற்றை வேண்டாம் என மறுத்துவிட்டேன் என்றும் அவர் கூறியிருக்கிறார்

நான் எப்போதும் வேலையில் ரிலாக்ஸ் ஆக இருக்க விரும்புவேன், பல படங்களை ஒரே நேரத்தில் ஒப்புக் கொண்டால் பிரஷர் அதிகமாகிவிடும் என்பதால் தான் இப்படி செய்ததாக அவர் கூறியிருக்கிறார்.
 

விஜய்யின் 10 படங்களை நிராகரித்த முன்னணி இசையமைப்பாளர்! யார் தெரியுமா | Why Harris Jayaraj Rejected Vijay S Many Films

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments