GOAT
ரசிகர்கள் மத்தியில் அளவுகடந்த எதிர்பார்ப்பில் இருக்கும் திரைப்படம் GOAT. வெங்கட் பிரபு – விஜய் கூட்டணி, யுவன் ஷங்கர் ராஜா இசை, பிரஷாந்த், பிரபுதேவாவுடன் விஜய் இணைந்துள்ளார், டீ-ஏஜிங் டெக்னலாஜி என படத்தின் மீது பல்வேறு எதிர்பார்ப்புகள் உள்ளன.
சமீபத்தில் வெளிவந்த பாடல் ரசிகர்களிடையே விமர்சனங்களை சந்தித்தது. ஆனாலும் படத்தின் மீது படக்குழு அதீத நம்பிக்கையில் இருக்கிறார்கள் என தகவல் வெளியாகியுள்ளது. படத்தை பார்த்த விஜய் மிகவும் மகிழ்ச்சியில் இருக்கிறாராம்.
இந்த நிலையில் GOAT படம் குறித்தும், விஜய்யுடன் இயக்குனர் வெங்கட் பிரபு இணைந்து பணிபுரிய வேண்டும் என்பது குறித்தும் அஜித் பேசியது குறித்து தகவல் வெளியாகியுள்ளது.
உண்மையை உடைத்த வெங்கட் பிரபு
சமீபத்தில் GOAT படம் பற்றி பேட்டி அளித்த இயக்குனர் வெங்கட் பிரபு பல சுவாரஸ்யமான விஷயங்களை அதில் பகிர்ந்துகொண்டுள்ளார்.
இதில் அஜித் குறித்து பேசிய வெங்கட் பிரபு “மங்காத்தா படம் பண்ணும்போதே, அடுத்து விஜய்யை வச்சுப் படம் பண்ணு, ரொம்ப நல்லா இருக்கும்’னு அஜித் சார் சொன்னார். GOAT படம் நான் பண்றேன்னு சொன்னதும், ‘என்னய்யா, எத்தனை வருஷமா நான் சொல்லிட்டிருக்கேன், சூப்பர். அருமையா பண்ணுன்னு கூறினார்” என வெங்கட் பிரபு பேசியுள்ளார்.
மேலும் “படம் ஆரம்பிக்கும் போதே அஜித் சார், ‘மங்காத்தா மாதிரி நூறு மடங்கு இருக்கணும்டா, அப்படி பண்ணுன்னு என்கிட்ட சொன்னார். எவ்வளவு பெரிய மனசு இருந்தால் இந்த வார்த்தை வரும் பாருங்க” என கூறினார்.