தளபதி 69
தளபதி 69 தான் நடிகர் விஜய்யின் கடைசி என அறிவிக்கப்பட்டு விட்டது. இப்படத்தை பிரபல முன்னணி இயக்குனரான ஹெச். வினோத் இயக்க கேவிஎன் நிறுவனம் தயாரிக்கிறது.
முதல் முறையாக இந்த கூட்டணி அமைந்துள்ளது.
மேலும் இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால், படத்தின் கதாநாயகி குறித்து இதுவரை எந்த அறிவிப்பும் வெளிவரவில்லை.
சமந்தா, பூஜா ஹெக்டே போன்ற நடிகைகளின் பெயர்கள் கதாநாயகி லிஸ்டில் அடிபட்டு வந்த நிலையில், தற்போது லேட்டஸ்ட் அப்டேட் ஒன்று வெளிவந்துள்ளது.
அஜித், ரஜினி பட நடிகை
அதன்படி, மலையாள திரையுலகில் அறிமுகமாகி, இன்று தென்னிந்திய அளவில் பிரபலமாக இருக்கும் நடிகை மஞ்சு வாரியர் தளபதி 69ல் நடிக்கவுள்ளார் என தகவல் தெரிவிக்கின்றனர்.
மஞ்சு வாரியர் அளித்துள்ள பேட்டி ஒன்றில் கூட, துணிவு படத்தில் ஹெச். வினோத்துடன் பணியாற்றி வந்தபோது, ‘நீங்க நல்ல நடிக்க மற்றொரு படம் தருகிறேன்’ என ஹெச். வினோத் தன்னிடம் கூறியதாக மஞ்சு வாரியர் பேசியுள்ளார்.
ஏற்கனவே தளபதி 69ல் மஞ்சு வாரியர் நடிக்கிறார் என்கிற பேச்சு உலாவ துவங்கிய நிலையில், மஞ்சு வாரியரின் பேட்டியும் வைரலாகி வருகிறது.
நடிகை மஞ்சு வாரியர், தமிழில் தனுஷ் நடிப்பில் வெளிவந்த அசுரன் படத்தின் மூலம் அறிமுகமானார். மேலும் அஜித்துடன் துணிவு மற்றும் தற்போது ரஜினியுடன் வேட்டையன் ஆகிய படங்களில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.