விஜய்யின் கோட்
விஜய்யின் கோட் படம் கடந்த செப்டம்பர் 5ம் தேதி உலகம் முழுவதும் ரிலீஸ் ஆகி செம வசூல் வேட்டை நடத்தி வருகிறது.
படத்திற்கு கலவையான விமர்சனங்கள் வந்தாலும் தளபதி ரசிகர்கள் அதைப்பற்றி கவலைப்படாமல் தங்களது நாயகனை திரையில் ரசித்து பார்த்து வருகிறார்கள்.
ரூ. 400 கோடி பட்ஜெட்டில் தயாரான இப்படம் 4 நாட்களில் ரூ. 288 கோடிக்கு மேல் மொத்தமாக கலெக்ஷன் செய்துள்ளது.
வரும் நாட்களிலும் படத்திற்கான வசூல் சக்கைபோடு போடும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.
மைக் மோகன்
ரூ. 400 கோடி கோட் படத்தின் பட்ஜெட் என்றும் இப்படத்திற்காக நடிகர் விஜய்க்கு ரூ. 200 கோடி சம்பளம் என்ற விவரத்தை கோட் பட தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி ஒரு பேட்டியில் கூறியிருந்தார்.
இந்த நிலையில் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ள மைக் மோகன் கோட் படத்திற்காக வாங்கியுள்ள சம்பளம் குறித்த விவரம் வெளியாகியுள்ளது.
இப்படத்தில் வில்லனாக நடித்துள்ள மைக் மோகன் சுமார் ரூ. 40 லட்சம் சம்பளம் பெற்றிருப்பதாக கூறப்படுகிறது.