தளபதி 69
ஹெச். வினோத் இயக்கத்தில் தளபதி விஜய் நடிப்பில் உருவாகவுள்ள திரைப்படம் தளபதி 69. இப்படத்தை கேவிஎன் நிறுவனம் தயாரிக்க, அனிருத் இசையமைக்கிறார்.
கடந்த சில தினங்களுக்கு முன் இருந்து, தளபதி 69ல் நடிக்கவுள்ள நட்சத்திரங்கள் குறித்து தொடர்ந்து அறிவிப்பை வெளியிட்டு வருகிறார்கள். பாலிவுட் நடிகர் அனிமல் பட புகழ் பாபி தியோல் இப்படத்தில் நடிப்பதாக முதல் அறிவிப்பு வெளிவந்தது.
இதை தொடர்ந்து நேற்று நடிகை மமிதா பைஜூ மற்றும் நடிகை பூஜா ஹெக்டே ஆகியோர் இப்படத்தில் இணைந்தனர். இதை தொடர்ந்து இன்று காலை கவுதம் மேனன் இப்படத்தில் இணைந்துள்ளார் என அறிவித்திருந்தனர்.
ப்ரியாமணி
இந்த நிலையில், தற்போது தளபதி 69ல் நடிகை ப்ரியாமணி இணைந்துள்ளார் என அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. தளபதி விஜய்யுடன் நடிகை ப்ரியாமணி இணைந்து நடிக்கவுள்ள முதல் படம் இதுவே ஆகும் என்பது குறிப்பிடத்தக்கது.
#Thalapathy69 family is happy to ‘OFFICIALLY’ welcome #Priyamani ♥️#Thalapathy69CastReveal#Thalapathy @actorvijay sir #HVinoth @thedeol @menongautham @hegdepooja #MamithaBaiju @anirudhofficial @Jagadishbliss @LohithNK01 pic.twitter.com/IS5562XY7x
— KVN Productions (@KvnProductions) October 3, 2024