ஷங்கர்
இந்திய சினிமாவின் பிரமாண்ட இயக்குனர்களில் ஒருவர் ஷங்கர். இவர் இயக்கத்தில் தற்போது இந்தியன் 2 திரைப்படம் உருவாகி வரும் ஜூலை 12ஆம் தேதி வெளியாகவுள்ளது.
ஷங்கர் இயக்கத்தில் வெளிவந்த சிறந்த திரைப்படங்களில் ஒன்று நண்பன். இந்தியில் இருந்து தமிழுக்கு ரீமேக் செய்யப்பட்ட திரைப்படமாக இருந்தாலும் கூட, நண்பன் ரசிகர்கள் மத்தியில் மாபெரும் வரவேற்பை பெற்றது.
இப்படத்தில் பல காட்சிகள் நம் மனதில் இடம்பிடித்துள்ளது. ஆனால், அதில் ஒருசில காட்சிகள் எப்பொழுது பார்த்தாலும் வேற லெவலில் இருக்கும். அப்படிப்பட்ட சீன் தான், ஜீவாவின் தந்தையை மருத்துவமனையில் அனுமதிக்கும் காட்சி.
உயிருக்கு போராடிக்கொண்டிருக்கும் ஜீவாவின் தந்தையை, ஆம்புலன்ஸ் வரும் வரை காத்திருக்க வேண்டும் என்பதற்காக கதாநாயகி இலியானாவின் Scooty-யில் வைத்து அழைத்து சென்று விடுவார் விஜய். இந்த காட்சி திரையரங்கில் கைதட்டல்களை அள்ளியது.
அன்ஸீன் புகைப்படம்
இந்த நிலையில், இந்த காட்சியில் படப்பிடிப்பில் நடந்த கலாட்டாவான புகைப்படம் ஒன்று வெளியாகியுள்ளது. Scooty-யில் விஜய், ஜீவாவின் தந்தை, இலியானாவிற்கு பதிலாக இயக்குனர் ஷங்கர் இருக்கும் படப்பிடிப்பு புகைப்படம் தற்போது வெளிவந்து வைரலாகி வருகிறது.
இதோ அந்த புகைப்படம்..