பொதுவாக விஜய் எப்போது ஷூட்டிங் ஸ்பாட்டில் அமைதியாக தான் இருப்பார். தனது ஷாட் முடிந்ததும் ஓரமாக அமர்ந்து பார்த்துக்கொண்டிருப்பார். யாரிடமும் அதிகம் பேசமாட்டார் என்றெல்லாம் பலரும் கூறி கேட்டிருப்போம்.
தற்போது வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய் நடித்து இருக்கும் கோட் படத்தின் ஷூட்டிங்கிலும் விஜய் அப்படி தான் இருந்தாரா என கேட்டால், அது தான் இல்லை.
அதிகம் bloopers..
விஜய் கோட் படத்தின் ஷூட்டிங் அதிகம் ஜாலியாக எல்லோரிடமும் கலாய்த்து பேசி இருக்கிறாராம். அதற்க்கு காரணம் நடிகர் பிரஷாந்த் தான் என இயக்குனர் வெங்கட் பிரபு தெரிவித்து இருக்கிறார்.
“விஜய் சார் அதிகம் bloopers கொடுத்ததற்கு பிரஷாந்த் தான் காரணம். அப்படி பேசி கலாய்த்து கலாட்டா செய்து கொண்டிருப்பார்” என குறிப்பிட்ட வெங்கட் பிரபு, விசில் போடு பாடலில் விஜய் உடன் பிரஷாந்தும் பிரமாதமாக நடனம் ஆடி இருக்கிறார் என தெரிவித்து இருக்கின்றனர்.