Saturday, March 15, 2025
Homeசினிமாவிஜய்யை பார்த்தவுடன் கைகள் நடுங்கியது.. இளம் நடிகை மமிதா பைஜூ ஓப்பன் டாக்

விஜய்யை பார்த்தவுடன் கைகள் நடுங்கியது.. இளம் நடிகை மமிதா பைஜூ ஓப்பன் டாக்


மமிதா பைஜூ

மலையாள திரையுலகில் அறிமுகமாகி இன்று தென்னிந்திய சினிமாவில் சென்சேஷனல் நடிகையாக ரசிகர்களின் மனதில் இடம்பிடித்துள்ளார் மமிதா பைஜூ.

கடந்த ஆண்டு பிரேமலு எனும் மாபெரும் வெற்றிப்படத்தை இவர் கொடுத்தார். மமிதா பைஜூ இயக்குநர் பாலா இயக்கத்தில் உருவான வணங்கான் திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமாக இருந்தார்.

ஆனால், சில காரணங்களால் இப்படத்திலிருந்து அவர் விலகிய நிலையில், தற்போது தளபதி விஜய்யின் ஜனநாயகன் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் என்ட்ரி கொடுக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

ஓப்பன் டாக்

இந்த நிலையில், முதல் முறையாக தளபதி விஜய்யை சந்தித்த போது ஏற்பட்ட அனுபவம் குறித்து வெளிப்படையாக பேசியுள்ளார் நடிகை மமிதா பைஜூ.

அவர் கூறுகையில் “விஜய் சாரை நேரில் பார்த்தபோது மிகவும் பதற்றமடைந்து விட்டேன். Hi சார் என்று சொன்னேன், அதற்கு மேல் பேச முடியவில்லை. கைகள் நடுங்கியது. இதை தெரிந்துகொண்டு விஜய் சார் என்னை நோக்கி நடந்து வந்து அமைதியாக ‘Hi மா’ என்று கை கொடுத்து அரவணைத்து கொண்டார். அந்த தருணத்தை வார்த்தைகளால் சொல்ல முடியாது. விஜய்யின் ரசிகையாக அந்த உணர்வை வெளிப்படுத்த முடியாது” என அவர் கூறியுள்ளார்.

விஜய்யை பார்த்தவுடன் கைகள் நடுங்கியது.. இளம் நடிகை மமிதா பைஜூ ஓப்பன் டாக் | Mamitha Baiju About Thalapathy Vijay

விஜய் குறித்து மமிதா பைஜூ பேச்சு தற்போது இணையத்தில் ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments